×

வாணியம்பாடி கடைகளில் ரெய்டு 216 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

*அதிகாரிகள் அதிரடி

வாணியம்பாடி : வாணியம்பாடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 216 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்கும் பொருட்டு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அந்தந்த பகுதிகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வாணியம்பாடி நகராட்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேற்று வாணியம்பாடி பஜார் வீதி, முகமது அலி பஜார், ஆத்துமேடு, வாணியம்பாடி வாரச்சந்தை பகுதி உட்பட அனைத்து முக்கிய பகுதிகளிலும் உள்ள கடைகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், சில கடைகளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு வைத்திருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் 216 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். விதிகளை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். மேலும், தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

The post வாணியம்பாடி கடைகளில் ரெய்டு 216 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Vayambagi ,Valiyambadi ,Vanyambaddy ,Dinakaran ,
× RELATED வாணியம்பாடியில் குடும்பத்துடன்...